தமிழகத்தில் நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைப்பு: ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (17:23 IST)
தமிழகத்தில் நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைப்பு: ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு..!
தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடைவிதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து பெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுமையாக நாங்கள் தடை விதிக்கவில்லை என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டம் ஒழுங்குகள் பாதிப்பில் ஏற்படக்கூடாது என்பதற்காக மாநில அரசு கவனமாக இருக்கிறது என்றும் தமிழக அரசு தரப்பு வாதம் செய்தது. கோவையில் கடந்த காலங்களில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் மாநில அரசின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை என்றும் நடைமுறையில் தான் தவறு என்றும் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கு மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. 
 
இதனை அடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் நடத்த திட்டமிட்டிருந்த பேரணியை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments