Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மோடியின் மூக்கணாங்கயிறு இவர்களிடமே உள்ளது’ - கி.வீரமணி பளார்

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (03:44 IST)
எந்த அமைச்சரையும் எச்சரித்து வெளியேற்றும் அதிகாரம் இல்லாததற்கு காரணம், மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், ”பிரதமர் மோடி பதவியேற்றபோது, ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகளைக் கொண்டு அவரது அமைச்சரவை நிரப்பப்பட்டதன் விளைவை பிரதமர் மோடி அனுபவித்து வருகிறார்!
 
எந்த அமைச்சரையும் எச்சரித்து வெளியேற்றும் அதிகாரம் பரிதாபத்திற்குரிய பிரதமருக்கு இல்லை போலும்; காரணம், மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது.
 
ஒவ்வொரு அமைச்சரும் ஆர்.எஸ்.எஸ். தீவிரக் கொள்கையை அமல்படுத்துவோராகக் காட்டிக் கொள்வது - மத்திய அரசுக்கு நாளும் தலைவலியையும், திருகு வலியையும் ஏற்படுத்துகிறது!
 
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள மகேஷ் சர்மா என்பவர், ‘‘சுற்றுலாவுக்கு இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் - குறிப்பாக பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து வரக்கூடாது’’ என்று அறிவித்ததைவிடக் கேலிக் கூத்து வேறு இருக்க முடியுமா?
 
வெளிநாட்டுப் பெண்களை மட்டுமல்ல, இந்தியப் பெண்களையும் இவர்கள், நாளும் இழிவுபடுத்தியே - அவர்களை தங்களது அடிமைகள் என்று கருதியே உத்தரவு போடும் எஜமானர்களாகவே கருதி, திமிர்வாதப் பேச்சில் திளைக்கின்றனர்!
 
எதை உண்பது? எப்படி உடுத்துவது? என்பது அவரவர் உரிமை! வெளிநாட்டவர்கள் குட்டைப் பாவாடை (மினி ஸ்கர்ட்) அணியக்கூடாதாம்!
 
பெண்களின் உடையால்தான் வன்முறைப் புணர்ச்சி - பலாத்கார நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று பொறுப்பற்ற முறையில் பேசிய சங் பரிவார் ஆசாமிகள் ஏராளம் உண்டு!
 
இப்படிப் பேசி இவர்களது ‘இந்துத்துவா’ கலாச் சாரத்தைப் பாதுகாக்க புதிய சேனாதிபதிகளாக கிளம்பியிருக்கிறார்கள்! இவர்களது கலாச்சாரம்தான் என்ன? வெளி நாட்டவர்கள் கேட்காவிட்டாலும், எள்ளி நகையாட மாட்டார்களா?
 
நிர்வாண சாமியாரை அழைத்து, அரியானா சட்டமன்றத்திற்குள் பேரவைத் தலைவர் இருக்கைக்கும் மேலாக வெள்ளி சிம்மாசனம் போட்டு அமரச் செய்து, முதலமைச்சரும், பிரதானிகளும் நிர்வாண சாமியாரின் கால்களில் முகத்தைப் புதைத்து மரியாதை செய்து, இதோபதேசம் செய்ய வைக்கும் அருவருக்கத்தக்க செய்கைகள்தான் இந்த இந்துத்துவா மேதைகளின் கலாச்சார அடையாளமா?
 
நிர்வாண சாதுக்கள் என்ற பெயரில் கும்பமேளா சாமியார்கள் வடக்கே திரிவதும், பக்த ‘சீடிகள்’ அவர்களைக் கண்டு ஆசீர்வாதம் வாங்குவதும் அன்றாட நிகழ்வு அல்லவா?” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments