Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக அறிக்கையும் ஒரே மாதிரி உள்ளது: சீமான் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (14:30 IST)
ஆர்எஸ்எஸ் மற்றும் திமுக எடுக்கும் முடிவுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார் 
 
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த போது ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கையும் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது என்றும் சந்தேகம் இருந்தால் இரண்டையும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சீமான் கூட்டம் ஒன்றில் பேசினார்.
 
பாபர் மசூதியை இடித்தது பாஜக என்றால் அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ் கட்சி என்றும் அந்த காங்கிரஸ் கூட்டணியில் தான் திமுக இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் சீமான் தெரிவித்தார் 
 
மாநில சுயாட்சி குறித்து பேசும் திமுக காஷ்மீர் இரண்டாக உடைந்தபோது அதை ஆதரித்து வருவது முரண்பாட்டின் மொத்த உருவமாக திமுக இருப்பதையே காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார் 
 
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்றும் நீட், ஜிஎஸ்டி, ஒரே நாடு ஒரே இந்தியா, என்பிஆர், சிஐஏ இவை அனைத்தையும் கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும் ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் அந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட முடியவில்லை என்றும் தற்போது பாஜகவிடம் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments