Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 525 கோடி லஞ்சம் - நத்தம் விஸ்வநாதன் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

ரூ. 525 கோடி லஞ்சம் - நத்தம் விஸ்வநாதன் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

கே.என்.வடிவேல்
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (22:20 IST)
ரூ 525 கோடி ஊழல் புகார் எதிரொலியாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்து மின்சாரம் வாங்கியுள்ளார் என்று சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 525 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றிருப்பதாகவும், அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குஸ்ரீனிவாசன் ரம் ஸ்ரீனிவாசன் புகார் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதன் அறிக்கையை, வரும் ஜூன் 2 ஆவது வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 12 மாவட்டங்களில் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

திருப்பதி லட்டு ஆய்வறிக்கை.. முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

மழைநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.! "உயிரிழப்புக்கு நிர்வாகச் சீர்கேடே காரணம்" - இபிஎஸ்...

அமைச்சராக பதவியேற்ற பின் ED அலுவலகத்தில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி..!

பிரதமர் மோடி குறித்து வெறுக்கத்தக்க வகையில் பேசுவதா.? கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments