Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இல்லையா? 5 ரூபாய் கொடுத்து கண்டக்டரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்: அமைச்சர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:44 IST)
மாஸ்க் இல்லையா? 5 ரூபாய் கொடுத்து கண்டக்டரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்
இன்று முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று கரூரில் பேருந்துகள் இயங்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’தமிழகத்தில் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் கண்டிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும்போது மாஸ்க் அணிய வேண்டும். ஒருவேளை பயணிகளிடம் மாஸ்க் இல்லாமல் இருந்தால் கண்டக்டரிடம் ரூபாய் ஐந்து ரூபாய் செலுத்தி புதிய மாஸ்க் வாங்கி அணிந்துகொள்ளலாம்’ என்று கூறினார்.
 
ஒவ்வொரு பேருந்தின் கண்டக்டர்களிடம் பயணிகளுக்கு தேவையான மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகிய இருவருக்கும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
எனவே மாஸ்க் இல்லாமல் சென்றாலும் கண்டக்டரிடம் வாங்கி அணிந்து கொண்டு பயணிகள் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த ஏற்பாட்டுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

திருப்பதி கோவில் மீது ட்ரோன் பறக்கவிட்ட யூடியூபர்.. கைது செய்த போலீசார்..!

அரிவாள் வெட்டில் முடிந்த பென்சில் தகராறு! 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments