Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3.50 கோடி கிலோ, ரூ.315 கோடி.. தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு கோழி விற்பனை..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (11:15 IST)
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டும் 3.50 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையாகவும் 315 கோடி ரூபாய்க்கு தீபாவளி முன்னிட்டு கோழி இறைச்சி விற்பனையாளராகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு  மட்டன் சிக்கன் உள்பட இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் அதிகாலையில் இறைச்சி வாங்குவதற்காக இறைச்சி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிக்கன் மட்டன் மீன் ஆகியவை விற்பனை அபாரமாக இருந்தது.  

இந்த நிலையில்  தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்த தகவலின் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 315 கோடி ரூபாய்க்கு கறிக்கோழிகள் விற்பனையானதாகவும் சுமார் 3 கோடி 50 லட்சம் கிலோ சிக்கன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் என்றும் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கி பொதுமக்கள் பண்டிகை கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments