Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்ந்த தக்காளி விலை.. உச்சத்திற்கு சென்றதால் மக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (07:43 IST)
தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் நேற்று பத்து ரூபாய் உயர்ந்த தக்காளி விலை இன்று ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளியின் வரத்து குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய் என விற்பனையான நிலையில் இன்று 30 ரூபாய் அதிகரித்து 140 என விற்பனையாகி வருகிறது. 
 
சில்லறை விலையாக 150 முதல் 160 வரை விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஆயிரம் டன் வரை தினமும் தக்காளி வரத்து இருக்கும் நிலையில் இன்று வெறும் 400 டன் மட்டுமே வந்ததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதே ரீதியில் சென்றால் தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய் தொட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவில் இன்னொரு ஏஐ அறிமுகம்.. ஒரே வாரத்தில் ஓரம் கட்டப்பட்டதா டீப் சீக்?

இன்றும் காந்திஜி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி..!

புலியின் சிறுநீரில் மருத்துவ குணம்.. முடக்கு வாதத்தை குணமாக்கும் என கூறி விற்பனை..!

மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!

மோடியும் கெஜ்ரிவாலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments