லிட்டருக்கு ரூ.2..! ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (09:29 IST)
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் இருந்து வந்த நிலையில் தற்போது பால்வளத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகிறது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம். தமிழ்நாடு முழுவதும் பல பால் சொசைட்டிகள் மூலமாக ஆவினுக்கு பால் பெறப்படுகிறது.

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லிட்டருக்கு 3 ரூபாய் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டது.

இனி பாலின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் விலையுடன் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலில் 6 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை கொழுப்பு சத்து உள்ள பாலை தரம்பிரித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் தரமான பாலை தொடர்ந்து வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments