Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000..! தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை முதல் நடைமுறை.!

Senthil Velan
புதன், 8 மே 2024 (15:42 IST)
அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன்  திட்டம் ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
 
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.
 
அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, கலை-அறிவியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்கில், மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.  இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது.
 
இதனிடையே, புதுமைப் பெண் திட்டத்தைப்போல, 360 கோடியில் ரூபாய் செலவில், மாணவர்களுக்கும் அத்திட்டம் விரிவு படுத்தப்படும் என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ALSO READ: வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்..! 10 நாட்களில் 400 பேர் பாதிப்பு..!!

இந்த நிலையில், அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன்  திட்டம் ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். தமிழ் புதல்வன் திட்டம் குறித்த அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments