மகனுக்குத் திருமணம் - நளினியை அடுத்து ராபர்ட் பயஸும் பரோல் வேண்டி மனுத்தாக்கல்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (10:19 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் தன் மகன் திருமனத்துக்காக ஒருமாதம் பரோல் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நளினி , முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரில் ராபர்ட் பயஸும் ஒருவர். இலங்கைத் தமிழரான இவருக்கு தமிழ்கோ என்ற மகன் உள்ளார். அவரும் பயஸின் மனைவியும் இப்போது நெதர்லாந்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமண வயதை எட்டிவிட்ட தனது மகனின் திருமணத்துக்காக தனக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கவேண்டும் எனக் கூறி சிறைத்துறை டிஐஜி-க்கு மனு அளித்தார். ஆனால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்  தனக்கு பரோல் வழங்கினால், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் சந்திரசேகரன் வீட்டில் தங்குவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் விளக்கம் அளிக்க இரண்டு வார காலம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தனது மகளின் திருமணத்துக்காக நளினி ஒன்றரை மாத காலம் பரோல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்