Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாப்பிள்ளைக் கோலத்தில் சென்றவருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (11:31 IST)
இணையதளம் மூலம் பெண் தேடிய வாலிபரை மணப்பெண் போல ஏமாற்றி கத்தி முனையில் செல்போன், ஏடிஎம் கார்டு மற்றும் பணம் ஆகியவற்றைப் பிடுங்கி சென்றுள்ளது மோசடி கும்பல் ஒன்று.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சரண் என்கிற காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், பிரபல இணியதளங்கள் மூலமாக தனக்குப் பெண் தேடியுள்ளார். இந்நிலையில் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது மொபைல் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தன்னை பெங்களூரில் பணிபுரியும் பிரியா அய்யர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப்பெண் நேரில் சந்தித்துப் பேசவேண்டுமெனக் கூறியிருகிறார்.
 
அதற்கு ஒத்துக்கொண்ட சரண்  அவர் கூறிய இடத்திற்கு செல்ல சம்மதிக்கிறார். முதலில் ஒரு தியேட்டருக்கு வர சொல்லியிருந்த அந்த பெண் பின்பு தனக்குத் தெரிந்த ஒரு ஹெஸ்ட் ஹவுசில் சந்திக்க அழைத்துள்ளார். சரணும் மறுப்பேதும் சொல்லாமல் அங்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது பிரியாவின் கூட மூன்று ஆண்கள் இருந்துள்ளனர். அவரைத் தனது உறவினர்கள் அறிமுகம் செய்திருக்கிறார் ப்ரியா. பேசிக்கொண்டிருந்த போதே திடீரென கத்தியைக் காட்டி சரணிடம் இருந்த செல்போன் போன்றவற்றைப் பறித்துக் கொண்டுள்ளனர்.
 
அதுமட்டுமல்லாமல் சரணின் ஏடிஎம் கார்டையும் பிடுங்கிக் கொண்ட அவர்கள் அவரின் பின் நம்பரையும் மிரட்டி வாங்கியுள்ளனர். இந்த சம்பவத்தைப் பற்றி வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர். ஆனால் தைரியமாக இது சம்மந்தமாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சரண். அதையடுத்து விசாரணையில் இறங்கிய போலிசார் இதில் தொடர்புடைய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். 
 
அவர்கள் கொச்சியைச் சேர்ந்த சாவித்ரி, கோடம்பாக்கம் சிவா மற்றும் மாதவரம் கோகுலகிருஷ்ணன் என விசாரனையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments