Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்னலுக்காக நின்ற ரயிலில் கொள்ளை - தொடரும் ரயில் கொள்ளைகள்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (20:14 IST)
வேலூர் அருகே சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த ரயிலில் புகுந்த கொள்ளையர்கள் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 

 
வேலூரை அடுத்துள்ள காட்பாடி அருகே புதனன்று சிக்னலுக்காக நீலகிரி எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலில் ஏறிய மர்மநபர்கள் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து ரயில் பயணிகள் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 
மேலும் ரயிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் ரயில் பயணிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments