Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்  மருத்துவமனையில் அனுமதி
, ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (23:35 IST)
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

 
கடந்த மாதம் தனது 90 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன். இந்த நிலையில்,  தனது வீட்டில், குளியல் அறைக்கு செல்ல, நாற்காலியில் எழுந்துள்ளார். 
 
அப்போது  நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.  இதில் அவருக்கு இடுப்பில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவரை, உடனே  தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து அரசியல் பிரபலங்கள் பலர் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.  

Share this Story:

Follow Webdunia tamil