Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்கே நகர் தேர்தலை இந்த தேதிக்குள் நடத்தியே ஆகனும்: கட்டாயத்தில் தேர்தல் ஆணையம்!

ஆர்கே நகர் தேர்தலை இந்த தேதிக்குள் நடத்தியே ஆகனும்: கட்டாயத்தில் தேர்தல் ஆணையம்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (11:40 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.


 
 
இந்த இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பணப்பட்டுவாடா நடந்தது. குறிப்பாக டிடிவி தினகரன் அணி மீது பணப்பட்டுவாடா தொடர்பாக ஏகப்பட்ட புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு சென்றது. வருமான வரித்துறை அதிகரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் நடத்திய சோதனையில் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றியது.
 
இது தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலை பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
 
இந்நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக காலியாக இருக்கும் தொகுதிக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஜூன் 5-ஆம் தேதிக்கு 6 மாதம் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 
மேலும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜனாதிபதி தேர்தல் நடக்கும் போது எந்த தொகுதியும் காலியாக இருக்கக் கூடாது. எனவே தற்போது ஆர்கே நகர் தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கு நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மே மாத இறுதியில் இந்த தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments