Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையம் சரியில்லை: அதனால் ஆர்.கே. நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை- ஈவிகேஎஸ் இளங்கோவன்

Webdunia
திங்கள், 8 ஜூன் 2015 (12:01 IST)
தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால், ஆர்.கே. நகர் தொகுதியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில், நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவதால், அங்கு அதிக அளவில் அத்துமீறல் நடைபெறுகிறது. அதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை.
 
மேலும், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பணப்பட்டுவாடா நடைபெறும் என நாங்கள் குற்றம் சாட்டியிருந்தோம். ஆனால், எங்கள் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம்  துணை போகின்றது என குற்றம் சாட்டினார். 
 
ஏற்கனவே, இந்த தொகுதியில் திமுக, பாமக, தாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments