Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 12 ஆம் சுற்று நிலவரம்: ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (11:48 IST)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வருகின்றது, ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.


 

 
12 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜெயலலிதா 1,18,043 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 7,215 வாக்குகளும் பெற்றுள்ளார்.
 
10 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 98,990 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 6,278 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 2,498 வாக்குகளும் பெற்றுள்ளார்.
 
9 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 87,026 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 5,941 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
5 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 49,000 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 3,713 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
 
4 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 38,806 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 2,809 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார்.
 
3 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 30,329 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 2,297 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார்.
 
இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 20,398 வாக்குகளும், மகேந்திரன் 1,647 வாக்குகளும் பெற்றனர்.
 
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு 9,546 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரனுக்கு 930 வாக்குகளும் பெற்றனர்.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments