சுஜித்திற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கும் இந்தியர்கள்..

Arun Prasath
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (08:27 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து டிவிட்டரில் இந்திய அளவில் #RIPSujith #SorrySujith ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்பதற்கு 80 மணி நேரத்திற்கும் மேல் போராட்டம் நடந்தது. ஆனால் சுஜித்தை உயிருடன் மீட்கமுடியவில்லை.

இந்நிலையில் சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்பு சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சுஜித்தின்  உடல் ஃபாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் டிவிட்டரில் இந்திய அளவில் #RIPSujith #SorrySujith #SujithWilson ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. மேலும் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சுஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அக்கா வீட்டுக்கு கண்டவங்க எல்லாம் வந்துட்டு போறாங்க.. ஆத்திரத்தில் தம்பி செய்த கொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்..!

புதுச்சேரியில் பிரதமர் மோடி.. அதிமுக்கிய விஷயத்தை மேடையிலேயே வாய் விட்டு கேட்ட முதல்வர் ரங்கசாமி..!

நாளை முதல் பொதுத்தேர்வு தொடக்கம்.. வினாத்தாளில் பிழை இருந்தால் உடனே செய்ய வேண்டும்? தமிழக அரசின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments