Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சங்க வளாகத்தில் கலவரம்: 21 பேர் கைது

நடிகர் சங்க வளாகத்தில் கலவரம்: 21 பேர் கைது
, ஞாயிறு, 27 நவம்பர் 2016 (15:49 IST)
63வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் நடிகர் சங்க உறுப்பினர்கள் உள்ளே நுழைய முயன்றதாக, இந்நாள் நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்துனார். இதானால் நடிகர் சங்க வளாகத்தில் கலவரம் வெடித்தது.


 

 
சென்னை லயோலா கல்லுரியில் இன்று 63வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது பழைய நடிகர் சங்க உறுப்பினர் உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.
 
அவர்கள் பழைய உறுப்பினர்கள் அட்டையை கொண்டு உள்ளே நுழைய முயன்றதாக இந்நாள் நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் வளாகத்தின் உள்ளே கலவரம் வெடித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தை கலைத்தனர். இதில் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
 
பொதுக்குழு ஆரம்பித்த சிறிது நேரத்திலே கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் எந்த முன்னறிப்பும் இல்லாமல் நடைப்பெற்றதாக ராதாரவி தெரிவித்தார்.
 
மேலும் பழைய நடிகர் உறுப்பினர்கள் 21 பேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலையன்ஸ் ஜியோ மாதக்கட்டணம் ரூ.499??