Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதியில் தமிழ் பெண் கைவெட்டப்பட்ட விவகாரம்: கனிமொழி கோரிக்கையை ஏற்றார் சுஷ்மா

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (21:53 IST)
சவுதியில் தமிழ் பெண் ஒருவரது கையை வெட்டி முதலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

 
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி(56). இவர், அங்குள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் வேலைக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவூதி சென்று பணியாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில், வெளிநாட்டு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சவூதி அரேபிய அதிகாரிகள், அந்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, தான் வேலை செய்யும் வீட்டில், அந்த வீட்டு முதலாளி மிகவும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கஸ்தூரி கூறி கதறியுள்ளார்.
 
இனால், அந்த வீட்டு முதலாளி கஸ்தூரியின் வலது கையைக் மிகக் கொடூரமாக வெட்டியுள்ளார். இதன் காரணமாக, ரியாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கஸ்தூரி சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அவருக்கு மேல்சிக்சை முறையாக செய்யவில்லை என தெரிய வருகிறது.
 
எனவே, அந்தப் பெண்ணை இந்தியாவு்ககு மீட்டுவந்து, அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
 
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். மேலும், இந்த சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள சவுதி வெளியுறவு அலுவலகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கவும், தமிழக பெண்ணின் கையை வெட்டியவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கவும் வெளியுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 
இதனையடுத்து, இந்த விவகாரத்தை சவுதியில் உள்ள இந்திய வெளியுறவுத்தறை, அந்நாட்டு அரசிடம் இது குறித்து முறையிட முடிவு செய்துள்ளது.
 
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு விரைந்து அழுத்தம் கொடுத்த திமுக எம்.பி.கனிமொழி, மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு அந்தப் பெண்வீட்டு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
 

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments