Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா: தலைவன் தலைப்பு செய்தியோடு வந்துட்டான்!!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (09:52 IST)
விநாயகர் சதுர்த்தி நாளன்று நித்தியாநந்தா கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்தியாநந்தா எப்போதும் வீடியோ வெளியிட்டு வண்டஹ் நிலையில் கொரோனா வந்ததில் இருந்து முன்பை போல வீடியோக்களை வெளியிடாமல் இருந்து வந்தார். ஆனால், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
அதில், விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். கைலாசாவிற்கு நிறைய நன்கொடைகள் கிடைத்துள்ளது. நல்ல காரியங்களுக்காக இதலை செலவிட வங்கி தொடங்கியுள்ளேன். 
 
வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது. கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டுவிட்டது. விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன். 
 
உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் கைலாசாவிற்கக அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. இங்கு அனைத்தும் சட்டத்திற்கு உடபட்டே நடக்கும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்