Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கிய சிறிது நேரத்தில் முடிவடைந்த பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (14:06 IST)
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. 


 

 
சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பண்டிகையை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு டிக்கெட் முன்பதிவு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.
 
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய சிறிது நேரத்திலே முடிவடைந்தது. இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரி கூறியதாவது:-
 
வரும் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் இரண்டு நாட்கள் முன்னதாகவே பெரும்பாலான மக்கள் வெளியூர்களுக்கு செல்வார்கள். இதனையொட்டி இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்தனர். பொங்கலுக்கு முந்தைய நாளுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது என்றார்.
 
மேலும் பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிக்களுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் திங்கட்கிழமை தொடங்கும் என தெற்கு ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments