Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் வேகத்தில் மீட்புப்பணிகள்: நாகையில் இயல்பு நிலை திரும்புகிறது

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (08:38 IST)
கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் புயல் கடந்த மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன

சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சாய்ந்திருந்த மின்கம்பங்களும் சரிசெய்யப்பட்டு வருவதால் மிக விரைவில் மின்சாரம் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் நாகை மாவட்டங்களில் உள்ள ஒருசில கடைகளும் சற்றுமுன் திறக்கப்பட்டு வருவதால் நகையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது

இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லை என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அத்தியாவசிய காரணம் இன்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments