உயிரிழந்தவர்களின் பெயரில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி !

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:31 IST)
சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால் பலர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர். 
 
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி செய்துள்ளனர். இந்த பணியில் ஈடுப்பட்ட 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments