Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’12,915 தபால் வாக்குகள்’ நிராகரிப்பு - அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (14:54 IST)
மக்களவை தேர்தலுக்கான வாக்கெடுப்பில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தபால் முறையில் வாக்களிப்பதற்கான படிவம் 12 முறைப்படி அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று ஏற்கனவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சாந்தகுமார் என்ற அரசு அலுவலர் அவருக்கு முறையாக ஓட்டு படிவங்கள் வழங்கப்படவில்லையென சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தபால ஓட்டுகள் குறித்த ஒரு முழுமையான தகவல் அறிக்கையை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்ததாவது “தபால் ஓட்டுகள் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் 4,30,000 பேர். அவர்களுக்கு 12 மற்றும் 12ஏ படிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்கள் 4,10,000. படிவங்களை முரையாக பரிசீலித்து 3,97,000 பேருக்கு ஓட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, திரும்பபெற்றவற்றில் 12,915 பேரின் தகவல்கள் சரியாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டன.” 
 
மேலும் 1 லட்சம் பேருக்கு வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்பது பொய் என்று தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தபால் ஓட்டுகளில் தொடர் குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும். மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோரின் அனைத்து வாக்குகளையும் பெறும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments