Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 மாவட்டங்களில் கனமழை: ரெட் அலர்ட்டை தொடர்ந்து மேலும் ஒரு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:31 IST)
தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் தற்போது மேலும் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
 
இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, கன்னியாக்குமரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டின் உள்ளே பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை இன்று சாரல் மழை மட்டுமே இருக்கும் என்றும் இருப்பினும் இன்று மாலைக்கு பின் இரவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments