காலில் விழ தயார்: நடிகர் ஆனந்தராஜ் உருக்கமான பேட்டி!

காலில் விழ தயார்: நடிகர் ஆனந்தராஜ் உருக்கமான பேட்டி!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (11:50 IST)
நடிகர் ஆனந்தராஜ் சமீபத்தில் சசிகலா குறித்து தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றது.  அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா அவசரம் காட்ட வேண்டியதில்லை. அதை மக்களும் விரும்பவில்லை என அவர் கூறியிருந்தார்.


 
 
இந்நிலையில் இது குறித்து அவர் அளித்த விளக்கம் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை கோவிலாக மாற்ற யார் காலிலும் விழத்தயாராக இருப்பதாக கூறினார்.
 
ஜெயலலிதா ஏதேனும் உயில் எழுதி வைத்துள்ளாரா? அவரது சொத்துக்கள் சட்டப்படி யாருக்கு சேர வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த போது நடிகர் ஆனந்தராஜ், உயில் பற்றி எனக்கு தெரியாது. நான் தெரிவித்த கருத்துக்கு, நிறைய வரவேற்பு கிடைத்தது. குடும்பம் என்றால் பிரச்சினை வரும். எது எப்படி இருந்தாலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை, கோவிலாக மாற்ற வேண்டும். இதற்காக, யார் காலில் வேண்டுமானாலும், விழத்தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.
 
மேலும் நினைவு இல்லமாக இல்லாமல், சிலைவைத்து, மூன்று வேளை பூஜையும் நடத்தக் கூடிய கோவிலாக, தியானம் செய்யும் இடமாக மாற்ற வேண்டும். ஏனென்றால் பெண்கள் மனதார ஜெயலலிதாவை மதிக்கின்றனர் என கூறினார்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments