Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மறு கூட்டலுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

Webdunia
திங்கள், 8 மே 2023 (14:02 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மறு கூட்டலுக்கு 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை முதல் மே 13ஆம் தேதி வரை மறு கூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை கூறியிருப்பதாவது:
 
விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை (9-ம் தேதி ) காலை 11 மணி முதல் 13-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
 
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
 
விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/- என்றும், 
மறுகூட்டலுக்கு  உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305, ஏனைய பாடங்கள் ரூ.205/- செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments