Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல இடங்களில் மறுவாக்குப் பதிவு! – இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (09:29 IST)
தமிழகத்தில் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமாக வந்து வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடந்த முதற்கட்ட தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சின்னம் இடம் பெறாமல் இருந்தது, சின்னம் மாறி இருந்தது, வாக்குசீட்டுகள் வார்டு மாறி வந்தது, ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்தது என பல்வேறு பிரச்சினைகளால் பல இடங்களில் தேர்தல் தடைப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தடைப்பட்ட இடங்களில் இன்று மீண்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஒரு சில வார்டுகளில் மட்டும் மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments