தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (12:10 IST)
குடியரசு தின விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் மரியாதை செய்யாதது குறித்து ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரீனா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதுடன், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலக ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சென்னையில் குடியரசு தினத்தன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செய்யாதது குறித்த தனது வருத்தத்தை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடிதம் எழுதியுள்ள ஆர்பிஐ மண்டல இயக்குனர் எஸ்எம்என் சுவாமி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments