Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டா கொழுகொழுன்னு வேணும்னா 4 லட்சமாகும்: லீக்கான நர்சின் ஆடியோ பதிவு; போலீஸார் தீவிர விசாரணை

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (12:30 IST)
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
குழந்தை கடத்தல் என்பது நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை காசுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
அது சம்மந்தமான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோ பதிவில் நர்ஸ் மறுமுனையில் பேசிய நபரிடம் ஆண் குழந்தன்னா ஒரு ரேட், பெண் குழந்தன்னா ஒரு ரேட். ஆனா அதுவே குழந்தை அழகா ஆரோக்யமா கொழு கொழுன்னு வேனும்னா 4 அல்லது 4.25 லட்சம் செலவாகும் என கூறுகிறார். 
இதுல எந்த பிரச்சனையும் வராது 30 வருஷமா இத செஞ்சுட்டு வரேன். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேணும்னா ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார். இந்த ஆடியோ பதிவு வேகமாக பரவியதை தொடர்ந்து போலீஸார் அந்த நர்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு பின்னணியில் ஒரு மிகப்பெரிய கும்பல் இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார் அவரிம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments