மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம்..

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (17:36 IST)
சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காந்தி என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவர் அருகே உள்ள கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். காந்தி வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டு குடும்பத்திற்கு பாரமாய் இருந்ததுடன் மனைவியை தினமும் அடித்து பணம் கேட்டு அதில்   குடித்தும் வந்திருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மகள் அழுதுகொண்டே தன் அம்மாவிடம்  அப்பா மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். 
தாய் மகளிடம் இது பற்றி விசாரிக்கவே, காந்தி கடந்த 5 வருடங்களாக பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததுடன் வன்புணர்வு செய்து இது அம்மாவுக்கு தெரியக் கூடாது என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
 
இதனைக்கேட்ட மனைவி கணவரிடம் தட்டிக்கேட்டுள்ளார்.அதற்கு ஆத்திரப்பட்ட காந்தி மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
 
இந்நிலையில்  மாமல்லபுரத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற மனைவி தன் கணவர் மீது புகார்  கொடுத்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் போக்சோ சட்டத்தில் கிழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்