Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி.. நாயுடு.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒரே ஒரு வரி பேட்டி..!

Mahendran
புதன், 12 ஜூன் 2024 (18:18 IST)
ஆந்திர முதல்வராக இன்று பதவி ஏற்றுக்கொண்ட சந்திரபாபு நாயுடு விழாவில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று முன்னர் சென்னை திரும்பிய நிலையில் அவர் ஒரே ஒரு வரி மட்டும் பேட்டி அளித்துவிட்டு சென்றுவிட்டார். 
 
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, முன்னாள் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அந்த விழாவை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். 
 
சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டபோதிலும் ’மதிப்புக்குரிய பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா மற்றும் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது’ என்று ஒரே ஒரு வரி மட்டும் பேசிவிட்டு உடனே அவர் கிளம்பி விட்டார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments