Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா ஆளுநர்; மகன் முதல்வர்: ஏத்திவிட்டு வேடிக்கை பார்த்த பாமக நிர்வாகிகள்!!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (10:02 IST)
காடுவெட்டி கிராமத்தில் பாமக தலைவர் ராமதாஸ், நான் நினைத்திருந்தால் எப்போதோ ஆளுநர் ஆகி இருப்பேன் என பேசியுள்ளார். 
 
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிரமாத்தில் மறைந்த ஜெ.குருவிற்கு கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பாமக தலைவர் ராமதாஸ் சென்றிருந்தார். வன்னியர் சங்க தலவராக இருந்த் ஜெ.குரு, ராமதாசிற்கு நம்பிக்கைகுறியவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நினைவு மண்டபத்தை திறந்து வைத்து விட்டு ராமதாஸ் பின்வருமாறு பேசினார். குரு எனது மூத்த மகன். அவர் உயிரோடு இருந்த போது திமுகவினர் அவருக்கு குடைச்சல் கொடுத்தனர். நானும், ஜி.கே.மணியும்தான் குருவை பாதுகாத்தோம். 
எனக்கு பதவி ஆசை கிடையாது. அப்படி இருந்து இருந்தால் நான் எப்போதோ ஆளுநராக ஆகியிருப்பேன். அதேபோல் குரிவின் கிராமத்திற்கு வேண்டிய அனைத்தையும் அன்புமணி முன்நின்று செய்வார் என தெரிவித்தார். 
 
இதன் பின்னர் அடுத்தடுத்து பேசிய முக்கிய பாமக நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் புகழை பாடினர். அதிலும் குறிப்பாக அன்புமணியை முதல்வராக்க குரு திவிர முயற்சிகளை மேற்கொண்டார் எனவும் நினைவு கூர்ந்தனர். 
 
இது போன்று அந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட வன்னியர் சங்க இளைஞர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் பெரும்பாலும் ராமதாஸ் மற்றும் அன்புமணியை புகழ்ந்து தள்ளினர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments