Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (06:46 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான, கனமழை பெய்து வரும் நிலையில் அவ்வபோது சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சி தலைவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒருசில பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன்படி திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

மேலும் நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, விருதுநகர், மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மழையால் இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
வழக்கம்போல் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments