Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்துக்கு முன்னர் ராம்குமார் அனுப்பிய கடிதம்: கிலியில் காவல்துறை!

மரணத்துக்கு முன்னர் ராம்குமார் அனுப்பிய கடிதம்: கிலியில் காவல்துறை!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (11:00 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் நேற்று மரணமடைந்தார். இது தற்கொலை என்று காவல்துறை, சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டாலும், பலரும் இது கொலை என சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று கடந்த 10-ஆம் தேதி சிறையில் உள்ள ராம்குமாருக்கு அவரது வழக்கறிஞர் மூலம் அனுப்பி ஒரு கடிதத்தை அனுப்பி ராம்குமாரின் பதிலை பெற்றுள்ளது.
 
தற்போது ராம்குமார் இறந்துவிட்டதால், சிறையில் இருந்து ராம்குமார் அனுப்பிய அந்த கடிதத்தை அந்த தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்களால் காவல்துறை கிலியில் உள்ளது.
 
அந்த கடிதத்தில், சுவாதி என்ற பெண் யாரென்றே எனக்கு தெரியாது நான் சுவாதியை ஒரு தலையாக காதலித்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. இந்த விஷயத்தில் என்னை எதற்காக கைது செய்தனர் என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய தலைகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் யாரையும் எனக்கு முன்னதாக தெரியாது என கூறியுள்ளார். சுவாதியை நான் பின் தொடர்ந்து செல்லவில்லை. இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் பிலாலையும் எனக்கு தெரியாது.
 
உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என்னை குற்றவாளியாக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் என்னை கைது செய்ய வந்தபோது போலீசாரே எனது கழுத்தை அறுத்தனர். இந்த கொலையின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். என பல்வேறு பரபரப்பு தகவல்களை ராம்குமார் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments