Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதனால்தான் சுவாதியை கொலை செய்தேன் : ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:18 IST)
சுவாதியை படுகொலை செய்த ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி யார் என தெரியாமல் காவல்துறை தடுமாறியது. 
 
இந்த நிலையில், கொலையாளியை பிடிக்க பல்வேறு கோணங்களில் முயன்ற காவல்துறைக்கு வெற்றி கிடைத்தது. இதனையடுத்து, நெல்லையில், ராம்குமார் எந்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்ய முயற்சிக்கும் போது, திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனையைடுத்து, பாளையங்கோட்டை ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மயக்கம் தெளிந்த ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில் “சுவாதியை நான் காதலித்தேன். ஆனால் அவர் என் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை உதாசீனப்படுத்தி பேசினார். மேலும் என் தோற்றம் பற்றி இழிவாக பேசினார். தேவாங்கு போல் இருக்கும் நீ என்னை காதலிக்கிறாயா என்று கோபமாக பேசினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரின் வாயில் வெட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் கொலையில் முடிந்துவிட்டது” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments