Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரை கைது செய்ய காரணமான ரூம்மேட் : பகீர் தகவல்கள்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (15:43 IST)
சுவாதி கொலையில், ராம்குமார் கைது செய்யப்பட்டதற்கு, அவர் தங்கியிருந்த விடுதியில் அவருடன் தங்கியிருந்த ஒருவர் கொடுத்த தகவல்தான் காரணம் என ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
அதாவது, சுவாதியை ரயில் நிலையத்தில் வெட்டிக் கொன்று விட்டு, நேராக தான் தங்கியிருகும் விடுதிக்கு சென்ற ராம்குமார், ரத்தம் படிந்த தனது சட்டையை அங்கே ஹேங்கரில் தொங்க விட்டுள்ளார். அதன்பின், அன்று இரவு 12 மணியளவில், தனது சொந்த ஊரான செங்கோட்டைக்கு கிளம்பி சென்று விட்டார்.
 
ஆனால், போலீசாருக்கு கொலையாளி யார் என்று கண்டி பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. அதானல், சூளைமேடு பகுதி முழுவதும் அவர்கள் சல்லடை போட்டு தேடி வந்தார்கள். போலீசாருக்கு பலரும் தொலைபேசியில் அழைத்து எராளமான தகவல்களை கூறி வந்தனர். இருந்தாலும், குற்றவாளியை பிடிக்க சரியான வழி கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.
 
இந்நிலையில், ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் தொலைபேசியில் ஒருவர் அழைத்துள்ளார். மேலும்,  “சுவாதியை கொலை செய்த கொலையாளி எங்கள் விடுதியில் தங்கியிருந்தான். உடனே வாருங்கள்” என்று கூறியுள்ளார். பரபரப்பான அந்த அதிகாரி உடனே அங்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளார்.
 
அதாவது, அந்த விடுதியில் ராம்குமாருடன் தங்கியிருந்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், ஆங்கரில் மாட்டியிருந்த ராம்குமாரின் சட்டை பார்க்க, அவருக்கு பொரி தட்டியுள்ளது. தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டப்படும் ராம்குமார் அணிந்திருக்கும் உடைதான் அது. மேலும், அந்த சட்டையில் படிந்துள்ள ரத்தக்கறையை பார்த்ததும் அவர் உடனே, விடுதியின் மேலாளரிடம் சென்று இதுபற்றி கூறியுள்ளார். 
 
அதன் பின்னர்தான் போலீசார் லாவகமாக செயல்பட்டு ராம்குமாரை கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments