Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (10:59 IST)
ராம்குமாரின் உடலை பிரேதபரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் தனியார் மருத்துவர் பங்கேற்க வேண்டும் என்ற ராம்குமார் தந்தையின் மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராம்குமார் தந்தை பரமசிவத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து எயிம்ஸ் மருத்துவரை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.
 
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடி தனியார் மருத்துவரை சேர்க்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
 
மேலும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் எயிம்ஸ் மருத்துவரை நியமித்து பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொண்டு பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலையில் ராம்குமார் தரப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments