Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரை ஆத்திரமூட்டிய சுவாதியின் அசிங்கமான வார்த்தை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (07:54 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமாரை காவல்துறை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ராம்குமார் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது.


 
 
நேற்று காவல்துறை ராம்குமாரிடமும், சுவாதியின் நெருங்கிய நண்பர் பிலால் மாலிக்கிடமும் விசாரணை நடத்தினர். ராம்குமாரிடம் தனியாக சில கேள்விகளை கேட்டனர் காவல்துறையினர். சுவாதியை முதல் முதலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்லும் போது பார்த்தாகவும், அப்போது அவரது பெயர் சுவாதி என்று எனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் சுவாதியை பார்த்தவுடன் அவர் மீது தனக்கு ஒருவித இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரிடம் பேச பல நாட்கள் முயற்சி செய்து அவரை பின்தொடர்ந்ததாக கூறினார்.
 
சுவாதி என்னிடம் பேசியதால் அவரை காதலிக்கத் தொடங்கினேன். ஆனால் அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி என் காதலை நிராகரித்து விட்டார். ஆனால் சுவாதியை என்னால் மறக்க முடியவில்லை. எனவே அவரை மிரட்டவே அரிவாளால் வெட்டினேன், அவரை கொலை செய்வது எனது நோக்கமில்லை.
 
சுவாதி மீது ஆத்திரம் ஏற்படுவதற்கு காரணம் அவர் என்னை அசிங்கமான திட்டிய வார்த்தை தான். என்னை பிடிக்கவில்லை என்றால் அமைதியாக என்னை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு போகலாம், ஆனால் சுவாதி என்னை அசிங்கமாக திட்டினார். குறிப்பாக தேவாங்கு என திட்டினார். என்னுடைய வாழ்க்கையில் யாரும் என்னை அப்படி பேசவில்லை.
 
சுவாதி என்னை அப்படி பேசியதை நினைத்து பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். அவர் பேசிய வார்த்தைகள் எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது என ராம்குமார் காவல்துறை விசாரணையில் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments