Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி சிம்கார்டு வாங்கிய ராம்குமார் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (11:01 IST)
சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், தூத்துக்குடியில் போலி சிம்கார்டு ஒன்றை வாங்கி பயன்படுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
குற்றவாளியை அடையாளும் காணும் விதமாக, இன்று சிறையில் போலீசார் அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கொலையை நேரில் பார்த்தவர்கள் இன்று சாட்சியம் அளிக்கிறார்கள். 
 
இந்நிலையில், ராம்குமார் தூத்துக்குடியில் போலியான முகவரியில் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த பின்பு அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டுகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அந்த விசாரணையில், ராம்குமார் பயன்படுத்திய சிம்கார்டு ஒன்று தூத்துக்குடி முகவரியில் பெறப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
 
எனவே இது பற்றி விசாரணை செய்ய, தனிப்படை போலீசார் தூத்துக்குடி சென்றனர். ஆனால் அந்த முகவரியில் யாரும் இல்லை என்பதும், அது ஒரு போலியான முகவரி என்பதும் தெரியவந்துள்ளது. எனவே இது பற்றி சிலரிடம் விசாரித்து விட்டு அவர்கள் சென்னை திரும்பினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்? அப்படி என்ன வருமானம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முக்கிய தீர்மானம்..!

சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்! பெரும் பரபரப்பு..!

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments