Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை விளம்பரத்தில் சர்ச்சை: வருத்தம் தெரிவித்தது ராமராஜ் காட்டன்

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (08:04 IST)
வேலை விளம்பரத்தில் சர்ச்சை: வருத்தம் தெரிவித்தது ராமராஜ் காட்டன்
ராமராஜ் காட்டன் நிறுவனம் வேலை விளம்பரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வார்த்தை இருந்ததை அடுத்து தமிழர்கள் பொங்கி எழுந்ததால் தற்போது வருத்தம் கேட்டுள்ளது 
 
ராமராஜ் காட்டன் நிறுவனம் திருப்பூர் மற்றும் மதுரை பகுதியில் உள்ள அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தது. இந்த விளம்பரத்தில் தெலுங்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து ராமராஜ் காட்டன் தயாரிப்புகளை இனிமேல் வாங்க மாட்டோம் என்பது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலானது. இதனை அடுத்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்தில் தெலுங்கு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை என குறிப்பிடப்பட்டிருந்தது ஐதராபாத் பணியிடத்திற்கானதாகும். தவறுதலாக திருப்பூர் என குறிப்பிடப்பட்டது. உங்கள் உணர்வுகள் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments