Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? ரமணன் தகவல்

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (08:03 IST)
வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று முன்னாள் சென்னை மண்டல வானிலை இயக்குனர் ரமணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கி சராசரியாக பருவமழை பெய்து வரும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இங்கு வருடம் தாமதமாகத்தான் தொடங்கினால் அடுத்த சில நாட்களில் நல்ல மழை பெய்யும். கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு மேல்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் அந்த வருடம் தான் மிக அதிகமாக மழைபெய்தது
 
தெற்கு கடலோர பகுதிகள், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் மிதமான மழையும் மற்ற பகுதிகளில் சற்று அதிகமாகவே மழை பெய்யும். ஐரோப்பிய ஒன்றிய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி தமிழகத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். நவம்பர் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று ரயில்கள் ரத்து குறித்த முழு விவரங்கள்..!

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments