Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியோட கூட்டணி வைக்கலாம்னு பாக்குறேன்! – பரபரப்பு கிளப்பும் ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:23 IST)
ரஜினி கட்சி தொடங்கினால் கூட்டணி வைக்க யோசித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமக கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்த பாமக தொடர்ந்து இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடனான தனது கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2021ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாமக கூட்டணியிலிருந்து விலகி போட்டியிட ஆலோசித்து வருவதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

இந்த யூகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸும் பாமக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்தும், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது குறித்தும் அவ்வபோது பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய ராமதாஸ் ”ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோமா என யோசித்து வருகிறேன். ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் பிறகு அதை பார்க்கலான்” என பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அதிமுகவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாஜக போன்றவை தங்கள் போக்கில் தமிழகத்தை அடுத்து தாங்கள்தான் ஆளப்போவதாக பேசி வரும் நிலையில் ராமதாஸின் இந்த பேச்சு மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments