Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமதாஸ் பாதுகாப்பு வாகனம் மோதி 6 பேர் படுகாயம்

ராமதாஸ் பாதுகாப்பு வாகனம் மோதி 6 பேர் படுகாயம்

ராமதாஸ் பாதுகாப்பு வாகனம் மோதி 6 பேர் படுகாயம்
, வியாழன், 11 பிப்ரவரி 2016 (00:30 IST)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-ன் பாதுகாப்பு வாகனம் மோதி 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
புதுச்சேரியில் நடைபெற்ற திருமணத்துக்கு, விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் இருந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது காரில் இரவு புறப்பட்டார். அவரது காருக்கு பின்னால் பாதுகாப்பு போலீசாரின் வாகனம் பின்தொடர்ந்து வந்தது.
 
அப்போது, காற்றாம்பாக்கம் அருகே அவரது பாதுகாப்புக்கு சென்ற வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அந்த வாகனம் சாலையோரம் நின்ற 4 பேர் மீதும் மோதியது.
 
இதில், மோட்டார்சைக்கிளில் சென்ற முத்துகிருஷ்ணன் (28), மணிபால் (22), சாலையோரம் நின்று கொண்டு இருந்த சுரேந்திரன் (25), மூர்த்தி (29), ஆறுமுகம் (62), முத்துகிருஷ்ணன் (47) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
 
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் புதுச்சேரி–திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil