Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசியகீதம் இசைக்கப்படும்போது சுவாமிகள் ஏன் தியானம் செய்யவில்லை!

விஜயேந்திரர்
Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (16:23 IST)
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து மரியாதை செய்யாமல் இருந்து விட்டு, தேசிய கீதம் பாடியபோது எழுந்து நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜயேந்திரரின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த காஞ்சி சங்கர மடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் வழக்கம் இல்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாகவும், அதனால் தான் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும் கூறியது.
 
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தேசிய கீதம் இசைக்கப்படும்போது விஜயேந்திரர் ஏன் தியானம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது வேண்டும் என்றே அவமதித்தது என்றும் இனிவரும் காலங்களிலாவது விஜயேந்திரர் போன்றவர்கள் தமிழின் பெருமையை உணர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

சென்னை அருகே தைவானிய தொழில் பூங்கா.. 50 ஆயிரம் + வேலைவாய்ப்புகள்..! - அமைச்சர் டிஆர்பி ராஜா சூப்பர் 20 அறிவிப்புகள்!

மகளிர் உரிமைத்தொகை: விடுபட்டவர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்: முதல்வர் தகவல்..!

யாராலும் நாங்கள் மிரட்டப்படவில்லை: ஆளுனர் குற்றச்சாட்டுக்கு துணை வேந்தர்கள் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments