Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோம் பற்றி எரிகையில் பிடில் வாசிக்கும் ரஜினி - நெட்டிசன்கள் கொந்தளிப்பு

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (13:39 IST)
காவிரி நீர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு என தமிழகம் போராட்ட பூமியாக மாறியுள்ள வேளையில், நடிகர் ரஜினிகாந்த் ஹாயாக மேடை நாடகம் பார்த்துக்கொண்டிருந்த புகைப்படம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துவிட்டாலும், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் எதற்கும் பெரிதாக கருத்து கூறுவதில்லை. அப்படியே கூறினாலும், மேலோட்டமாக, யாருக்கும் எதிர்ப்பில்லாமல் மென்மையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். 
 
காவிரி மேலான்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் போராட்டங்களை துவக்கியுள்ளனர். குறிப்பாக காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சாலைமறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
 
இந்நிலையில், ரஜினிகாந்த் நேற்று தனது சகலை ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகத்தை 2 மணி நேரம் ரசித்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சனை நடந்துகொண்டிருக்கும் போது ரஜினி இப்படி நாடகம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இது ரோம் பற்றி எரியும் போது மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருப்பது போல் இருக்கிறது என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments