Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி தொடங்க துடிக்கும் தொண்டர்கள்; அதிருப்தியில் ரஜினி! – பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பா?

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (11:03 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்ட நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் கட்சி தொடங்கப்படுமா என்பது இன்னமும் சந்தேகத்திற்குரிய கேள்வியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தனது மக்கள் மன்ற பொறுப்பாளர்களை அழைத்து நடிகர் ரஜினி இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் கட்சி தொடங்கலாமா என ரஜினி கேட்டதற்கு ஜனவரிக்குள் கட்சியை தொடங்கியே ஆக வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என ரஜினி கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்ற உடனேயே கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்றும், எதிர்வரும் ரஜினி பிறந்தநாள் அன்று இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments