Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியை எப்போ ஆரம்பிக்கலாம்? – நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (12:16 IST)
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மாவட்ட நிர்வாகிகளோடு நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டுள்ளார்.

தான் கட்சி தொடங்குவது உறுதி என்று ரஜினிகாந்த் உறுதியளித்த பிறகு தனது பட வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

2021ல் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக உற்று நோக்கப்படுகிறது. ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியை எப்போது தொடங்கலாம் என்பது குறித்தும், அதற்கு முன்னர் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அடுத்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்த இருப்பதாகவும் அதில்தான் ரஜினிகாந்த் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன் தயாரிப்பு வேலைகள் பற்றி ஆலோசிக்கவே இந்த நிர்வாகிகள் சந்திப்பு என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments