கலைக்கப்பட்டது ரஜினி மக்கள் மன்றம்!? – ரஜினி அறிவிப்பால் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (11:18 IST)
அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்று ஆலோசித்த ரஜினி தனது மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவில் பின்வாங்கினார். பின்னர் அண்ணாத்த படப்பிடிப்புகளை முடித்த ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளதுடன், தனது ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் மன்றம் மாறாக இனி ரஜினி ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விளக்கத்தை ரஜினிகாந்த அறிக்கையாக வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments