Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் கட்சி தொடங்கல தெரியுமா..? - ரஜினி பெயரில் வந்த வாட்ஸ் அப் செய்தி!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (09:26 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிதாக கவனிக்கப்பட்ட ரஜினிகாந்த் கட்சி தொடங்காதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பது அவரது தொண்டர்களை வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினி வெளியிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ரஜினி தனக்கு ஏற்கனவே இரண்டு முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனா உள்ள நிலையில் கட்சி தொடங்குதல், பொதுக்கூட்டம் என சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தனக்கு மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் தன்னால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என கூறியிருப்பதாக உள்ளது.

மேலும் தான் தன்னுடைய உயிருக்காக பயப்படவில்லை என்றும், கட்சி தொடங்கி சில நாட்களிலேயே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அது கட்சி பணியை பாதிக்கும் என்பதாலேயே அமைதி காப்பதாகவும் கூறியுள்ளதாக உள்ளது.

இந்த வாட்ஸ் அப் தகவல் அதிகாரப்பூர்வமானதா என தெரியாத நிலையில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments